விராட் கோலிக்கு இடமே இல்லை… டி.20 போட்டிகளுக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்த ஹர்பஜன் சிங் !!

தனது சிறந்த ஆடும் 11ஐ தேர்வு செய்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.

உலகக் கோப்பை தொடருக்கான போட்டி துபாய் அமீரகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர், மேலும் இந்திய அணி செய்த தவறு குறித்தும் இந்திய அணியின் தேர்வு குறித்தும் பல்வேறு வகையான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

மேலும் ஏதேனும் ஒரு டி20 தொடர் நடந்தால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது சிறந்த டி20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வது வழக்கம்,அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது டி20 தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

தனது அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்துள்ளார் மேலும் துவக்க வீரராக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தேர்வு செய்துள்ளார். மேலும் இவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லரும் மேலும் அவரி தொடர்ந்து 4வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷான் வாட்சனையும் தேர்வு செய்துள்ளார்.

ஷான் வாட்சன் குறித்து பேசிய அவர் தனது அணிக்காக வாட்சன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு பல முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.மேலும் இவரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிரன் பொல்லார்டயும் தேர்வு செய்துள்ளார்.பொல்லார்ட் குறித்து பேசிய அவர் பொல்லார்ட் இல்லாத டி 20 தொடர் என்பது சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் சுணில் நரேன், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசீத் மலிங்கா, மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அகியவரையும் தேர்வு செய்துள்ளார்.இவர் தேர்வு செய்த இந்த ஆடும் 11இல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.