ஆஸ்திரேலிய வீரர்கள் அறம் இல்லாதவர்கள்; ஹர்பஜன் சிங் ஓபன் டாக்
கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை ஹர்பஜன் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும், ஆஸ்திரேலிய வீரரும் சைமண்டுஸும் மோசமாக சண்டையிட்டு கொண்டனர். மேலும் இந்த போட்டியில் பல மோசமான அம்பயர் தவறுகள் இந்திய அணிக்கு பாதமானதாக அமைந்தது.
இந்த நிலையில் இந்த டெஸ்ட் குறித்து தற்போது ஆகாஷ் சோப்ராவுடன் பேசும் போது சில விஷயங்களை நினைவுகூர்ந்துள்ளார் ஹர்பஜன் சிங்.
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், அந்த போட்டியின் போது ரிக்கி பாண்டிங்கே ஒரு அம்பயர் போல செயல்பட்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் என்ன நடக்கிறதோ அது களத்தோடு தான் இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் எனக்கும் சைமண்ட்ஸிற்கும் இடையே நடந்த விஷயம் களத்தை தாண்டி வெளியேவந்தது.
நானும் சைமண்ட்ஸும் அருகே இருந்தோம். எங்களுக்கு அருகில் இருந்தது சச்சின் ஒருவர் மட்டும் தான். வேறு யாரும் அந்த சம்பவத்தின் போது எங்கள் அருகில் இல்லை. ஆனால் விசாரணையின் போது ஹேடன், கில்கிறிஸ்ட், கிளார்க், ரிக்கி பாண்டிங் ஆகியோர் பஜ்ஜி சைமண்ட்ஸ் இட் ம் என்ன சொன்னார் என்பது எங்களுக்கு தெளிவாக கேட்டது என்றார்கள்.
அவர்கள் யாருமே இந்த படத்தில் இல்லை என நானாக நினைத்துக்கொண்டேன். எங்கள் அருகில் இருந்த சச்சினுக்கே நாங்கள் பேசியது தெளிவாக கேட்டிருக்க வாய்ப்பு குறைவு தான். எனக்கும் சைமண்ட்ஸுக்கு மட்டுமே நாங்கள் என்ன பேசினோம் என தெரியும். ஆனால் ஆஸ்திரேலிய மீடியாக்கள் என்னை மைக்கேல் ஜாக்சனாக்கி விட்டார்கள். எங்கு சென்றாலும் கேமிராவுடன் துரத்தினார்கள்” என்றார்.