முரட்டு பார்ம்ல இருக்காங்க…. அவுங்கள ஜெயிக்க வாய்ப்பே இல்ல.. சாம்பியன் பட்டமும் இந்த டீமுக்கு தான்; ஹர்பஜன் சிங் கணிப்பு
நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி எது என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் டி.20 தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கியது. மொத்தம் 74 போட்டிகளை கொண்ட இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் கொல்கத்தா முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. எஞ்சியுள்ள இரண்டு இடங்களில் ஒன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது, இதனால் நான்காவது இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.
மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையே தான் நான்காவது இடத்தை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. 18ம் தேதி நடைபெற இருக்கும் பெங்களூர் – சென்னை இடையேயான போட்டியின் முடிவிலேயே நான்காவது இடத்தை பிடிக்க போகும் அணி எது தெரியவரும்.
ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் ப்ளே ஆஃப் சுற்றில் எந்த எந்த அணி வெற்றி பெறும், எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங்கும், நடப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் மற்ற அணிகளை விட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து வகையிலும் வலுவான அணியாக உள்ளது. ஓபனிங், மிடில் ஆர்டர், பினிசிங் என அனைத்திலுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறை சொல்ல முடியாத அளவிற்கு வலுவான அணியாக உள்ளது. கொல்கத்தா அணியில் அதிகமான மேட்ச் வின்னர்கள் உள்ளார்கள், இதன் காரணமாகவே அவர்கள் புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்கள். கொல்கத்தா அணியை வீழ்த்துவது சாதரண விசயம் கிடையாது, கொல்கத்தா வீரர்களின் தற்போதைய பார்மை வைத்து பார்த்தால் அவர்களை வீழ்த்துவது நடக்காத காரியம் என்றே தெரிகிறது. கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.