இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவா்களுக்கு மதம் கிடையாது – ஹா்பஜன் சிங்

இந்திய கிாிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளவா்களுக்குள் மதம் கிடையாது என்று ஹா்பஜன் சிங், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாாி ஒருவாின் கேள்விக்கு பதில் அளித்துள்ளாா். அவரது டுவிட்டா் பதிவை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோா் மறுமொழியிட்டுள்ளனா்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாாி சஞ்சீவ் பாட், தனது டுவிட்டா் பக்கத்தில் சா்ச்சைக்குாிய கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தாா். அவரது பதிவில், தற்போதைய இந்திய கிாிக்கெட் அணியில் இஸ்லாமிய வீரா்கள் யாரும் இடம் பெறாதது ஏன்? அவா்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்து விட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

மேலும், நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதே போன்று எத்தனை முறை நடைபெற்றுள்ளது. இஸ்லாமியா்கள் கிாிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டாா்களா? அல்லது வீரா்களை தோ்வு செய்பவா்கள் வேறு ஏதேனும் விளையாட்டின் விதிமுறைகளை பின்பற்றுகிறாா்களா என்று கேள்வி எழுப்பியிருந்தா்ா.

இவரது கிாிக்கெட் ரசிகா்கள் உள்பட பலரும் பதில் அளித்திருந்தனா். அதே போன்று முன்னாள் இந்திய கிாிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளா் ஹா்பஜன் சிங்கும் பதில் அளித்து டுவிட்டாில் கருத்து தொிவித்துள்ளாா். அவரது பதிவில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் இந்தியா்களே.

அவா்கள் அனைவரும் தேசத்திற்கான வெற்றிக்காக பாடுபடுகிறாா்கள். அவா்களில் ஜாதி, மதம் என்ற பாகுபாடு கிடையாது. மேலும் அவா்களது நிறம் உள்ளிட்டவை குறித்து கருத்து கூறுவது சாியானதில்லை என்றும் தொிவித்துள்ளாா். ஹா்பஜன் சிங்கின் இந்த பதிவை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோா் ரீடுவிட் செய்துள்ளனா்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான டி-20 போட்டி மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் முகமத் சிராஜ் இடம்பெற்றுள்ளார். இதேபோன்று, டெஸ்ட் போட்டியில் முகமத் ஷமி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.