கொரோனா வைரஸ் இந்தியாவில் பரப்பப்பட்டதா..? சர்ச்சையான வீடியோ வெளியிட்ட ஹர்பஜன் சிங் !!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரப்பப்பட்டதா..? சர்ச்சையான வீடியோ வெளியிட்ட ஹர்பஜன் சிங்

கரோனா வைரஸ் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றில் முன்கூட்டியே கூறப்பட்டிருப்பது குறித்த தனது ட்விட்டர் பதிவை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நீக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கரோனா வைரஸ் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றில் முன்கூட்டியே கூறப்பட்டிருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ”இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. வீட்டில் இருந்தால் உடனே நெட்ஃப்ளிக்ஸ் போய் ‘மை சீக்ரட் டெர்ரியஸ்’ என்று டைப் செய்யுங்கள். முதல் சீசனில் 10-வது தொடரில் 53-வது நிமிடத்தில் பாருங்கள். இந்தத் தொடர் 2018 ஆம் ஆண்டு வெளியானது. நாம் இப்போது 2020ல் இருக்கிறோம். அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இது ஏற்கெனவே போடப்பட்ட திட்டமா?” என்று ஹர்பஜன் கூறியிருந்தார்.

 

அந்தப் பதிவோடு சம்மந்தப்பட்ட தொடரின் வீடியோவையும் இணைத்திருந்தார் ஹர்பஜன். தற்போது அந்தப் பதிவை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ரசிகர்கள் கரோனா வைரஸ் என்பது பலகாலமாக இருந்து வருவது என்று கருத்து தெரிவித்து வந்தனர். சிலர் ஹர்பஜன் சிங்கை வைத்து மீம்ஸ் உருவாக்கியிருந்தனர். இதன் காரணமாகவே தனது பதிவை ஹர்பஜன் நீக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.