தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2012ம் ஆண்டில் வெளியான படம் ‘3’. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இந்தப் படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் பாடல் யுடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ‘கொலைவெறி’ பாடலை இந்திய அணியின் வீரர்களான பாண்டியா சகோதரர்கள் பாடி உள்ளனர். பாண்டியா சகோதரர்கள் இருவரும் இணைந்து ‘கொலைவெறி’ பாடலை கைபேசியை பார்த்தவாறு படுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ‘கொலவெறி’ பாடல் மீண்டும் பாண்டியா சகோதரர்களால் மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை ஹார்திக் பாண்ட்யாவும், அவரது சகோதரர் க்ருனல் பாண்ட்யாவும் இணைந்து பாடியிருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது
மேலும், அந்த வீடியோவில், அவரும் அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து கைப்பேசியில் வரிகளை பார்த்தவாறு கொலைவெறி பாடலை பாடுகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாண்டியா சகோதரர்களின் கொலவெறி வெர்ஷனை பார்த்து ரசித்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.
டி20 கிரிக்கெட்டில் இடம்பிடித்து வரும் க்ருணால் பாண்டியா, தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் கூட, மூன்று போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதையும் வென்றார். இரண்டாவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார்.