ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் வாழ்த்து !!

ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், நம்பிக்கை நாயகனுமான ஹர்திக் பாண்டியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியான செர்பியா நாட்டு நடிகை நடாசாவை, நடுகடலில் வைத்து மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த சில மாதங்களிலேயே ஹர்திக் பாண்டியா வெளியிட்ட மற்றொரு இன்ஸ்டா பதிவில், நடாசா கர்பமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஹர்திக் பாண்டியா இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாண்டியா வெளியிட்டுள்ளப் பதிவில் ”நாங்கள் எங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர் வதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பதிவிட்டு அதில் தனது குழந்தையின் கைவிரலை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, முகுதுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற உலக கோப்பைக்கு பிறகு அவ்வளவாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.