ஹர்திக் பாண்ட்யா ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையானதால் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில கருத்துக்களை முன் வைத்தார். அவை சர்ச்சையானதால் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத பாண்ட்யா, டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஹர்திக் பாண்டியா பெண்களைப் பொருளாகப் பார்க்கும் கண்ணோட்டத்தில் பதில் கூறியிருந்தார்.
மேலும், கேள்வி பதில் சுற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் யார் என கேட்கப்பட்டது. இதற்கு சிறிதும் தயங்காமல் கே.எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் கோலியின் பெயரைக் குறிப்பிட்டனர்.
இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியாவும் கேஎல் ராகுலும் பங்கேற்றார்கள். இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? சச்சினா விராட் கோலியா என்கிற கேள்விக்கு இருவருமே விராட் கோலி எனப் பதில் அளித்தார்கள். இதற்குச் சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு உருவானது.
இந்நிலையில் அதே நிகழ்சியில் பெண்கள் குறித்து மோசமாகப் பேசியுள்ளார் பாண்டியா. இதையடுத்துச் சமூகவலைத்தளங்களில் பாண்டியாவுக்கு அதிக எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. மீ டூ இயக்கம் வளர்ந்துவரும் தருணத்தில் பாண்டியா இதுபோல பேசியிருக்கக்கூடாது என்று பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்
தனது பெற்றோரிடம் தான் பழகி வரும் பெண்கள் குறித்து சொன்னதாகவும், தான் பாலியல் உறவுகள் குறித்து கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.
அதனால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த விதத்திலாவது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த உள்நோக்கத்துடனும் காயப்படுத்தவில்லை” என்று கூறியிருந்தார். யாரையும் அவமரியாதை செய்வதோ யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பாண்ட்யா இணைந்தார். ஆனாலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்தியா, இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.வ்