காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் ஆட முடியாத நிலையிலுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதற்கு பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் அவரது உடல் தகுதியை நிரூபிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அவரது பாணியில் ரஞ்சி கோப்பை தொடரில் ஆடி உடல்தகுதியை நிரூபிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் 4 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றபோது க்ருனல் பாண்டியா, சில சுவரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS
பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் பந்துவீசிய க்ருனல் பாண்டியாவிற்கு மிகவும் மோசமான போட்டியாக அமைந்தது. மொத்தம் 4 ஓவர்கள் வீசிய அவர் 55 ரன்களை வாரி வழங்கினார். ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலியாவின் அனைத்து பேட்ஸ்மேன்களும் க்ருனல் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். குறிப்பாக, அவர் வீசிய 14-வது ஓவரில் மேக்ஸ்வெல் தொடர்ந்து 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் போனது.
அடுத்த ஓவரில் 17 ரன்கள் போனது. பவுலிங்கில்தான் இப்படி என்றால், பேட்டிங்கில் அதைவிட மோசமாக இருந்தது. 4 பந்தில் 2 ரன் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். வெளிநாட்டு மண்ணில் களமிறங்கிய இந்த முதல் போட்டியை எளிதில் மறந்துவிட மாட்டார். மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி சற்று ஆறுதல் அளித்தார்.
3-வது போட்டியில் ஆக்ரோசமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 36 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு இந்தியா வெற்றி பெற உதவியது. அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் க்ருனல் பெற்றார்.போட்டி முடிந்தபின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் அதிக ரன்கள் கொடுத்ததற்கு ஹர்திக் கேலி செய்து சிரித்தார். அவரின் விளையாட்டை நானும் இப்படித்தான் கேலி செய்வேன்” என்று ருசிகரமான தகவலைக் கூறினார். அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் பாண்டியாவிற்கு இடம் கிடைக்காவிட்டாலும், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளது.