விண்டீஸுக்கு எதிரான உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம்
விண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இர்மா, மரியா ஆகிய இரண்டு புயல்கள் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் கிரிக்கெட் மைதானங்களும் அடங்கும். இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில் மே 31-ந்தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டி20 போட்டி நடத்த திட்டமிட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக லெவன் அணியினை எதிர்கொண்டு விளையாடுகிறது.
உலக லெவன் அணியில் ஷாகித் அப்ரிடி, சோயிப் மாலிக், திசாரா பெரேரா ஆகியோர் விளையாட சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் வங்காள தேசத்தின் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோரும் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை ஐசிசி உறுதி செய்துள்ளது. உலக லெவன் அணிக்கு மோர்கன் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
இந்நிலையில் விண்டீஸ் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடருக்கான உலக லெவன் அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போல் உலக லெவன் அணியில் ஷாகித் அப்ரிடி, சோயிப் மாலிக், திசாரா பெரேரா ஆகியோர் விளையாட சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் வங்காள தேசத்தின் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோரும் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை ஐசிசி உறுதி செய்துள்ளது. உலக லெவன் அணிக்கு மோர்கன் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.