வின் பண்ணிட்டோம்னு ஆடாதீங்க.. வந்து ஃபைன் கட்டிட்டு போங்க – ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்து ஆப்படித்த ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் விதிமுறைப்படி உரிய நேரத்திற்குள் செய்து முடிக்கவில்லை என்கிற காரணத்திற்காக, ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.

மொகாலியில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்திருந்தது.

154 ரன்கள் எனும் எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, துவக்கத்தில் மிகச்சிறப்பாக விளையாடி அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டது. பின்னர் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டதால் பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.

கடைசி ஓவர் வரை சென்ற என்ற இந்த ஆட்டத்தின் 19 ஓவரின் 5 ஆவது பந்தில் ராகுல் திவாட்டியா ஒரு முக்கியமான பவுண்டரியை அடித்துக்கொடுக்க குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு சென்ற போட்டியும் கடைசி ஓவர் வரை சென்றது. ஆனால் அதில் குஜராத் அணி துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுவிட்டதால் சற்று கொண்டாட்ட கணிப்பில் குஜராத் அணியினர் இருந்தனர்.

இந்த நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதமாக 12 லட்சம் ரூபாய் மற்றும் இனி இப்படி நடக்கக்கூடாது என்கிற எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.

எதற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது என்கிற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பவுலிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை போட்டு முடிக்கவில்லை. சிறிது நேரம் தாமதமாகியதால் ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதோடு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் விதிமுறைகளின் படி, பந்துவீச்சு அணியின் கேப்டன் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை போட்டு  முடிக்கவில்லை என்றால் அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும். அத்துடன் வார்னிங் கொடுக்கப்படும். இந்த வார்னிங் அதிகபட்சமாக இரண்டு முறை கொடுக்கப்படும்.

மூன்றாவது முறை வார்னிங் பெற்றால் அந்த அணியின் கேப்டன் சில போட்டிகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் ஹார்திக் பாண்டியாவிற்கு இந்த வார்னிங், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.