அடிக்கடி பெண்களை மாற்றிக்கொண்டே இருக்கும் ஹார்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் ஆனா ஹார்திக் பாண்டியா சில வாரங்களுக்கு முன்பு தான் எல்லி அவ்ராம் உடன் தொடர்பில் உள்ளார் என பேசப்பட்டது. ஆனால் அவர் பாலிவுட் நடிகை ஈஷா குப்தா உடன் காதல் நட்பில் உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்திய அணியின் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ஹார்திக் பாண்டியா, பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி ஒவ்வொரு போட்டியிலும் நன்கு செயல்பட்டு வருகிறார். இவர் ஐபில் போட்டியிலும் நன்றாக ஆடியதால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியிலும் இடம் பெற்றார். மேலும், டெஸ்ட் போட்டியிலும் நன்றாக ஆடி வருகிறார்.

இவர் தனது ஹேர்ஸ்டைல் ஆடை அலங்காரம் இவற்றில் எப்பொழுதும் எங்கு சென்றாலும் புது புது விதமாக அணிந்து வருவார். இவருக்கு அவ்வப்போது கிசுகிசுக்கள் எழுந்துகொண்டு இருக்கும். அதற்கு ஏற்றார் போல் இவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கயில் பெண்களுடன் தான் வருவார்.

அண்மையில், இவருக்கும் கிரீக் நடிகை எல்லி அவ்ராம் இருவருக்கும் காதல் இருக்கிறது என பேசப்படுகிறது. எல்லி அவ்ராம் தற்போது பாலிவுடில் பணிபுரிந்தும் நடித்தும் வருகிறார். எல்லி ஹார்திக் இருவரும் எல்லா நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே செல்கிறார்கள். தனியார் ஹோட்டலிலும் ஒன்றாகவே தங்கி இருக்கிறார்கள் எனவும் பேசப்பட்டது.

ஆனால், தற்போது எல்லி க்கும் ஹார்திக் பாண்டியா க்கும் எதுவும் இல்லை. வேறு ஒரு பெண்ணுடன் தான் நட்பில் உள்ளார் எனவும் பேசி வருகிறார்கள். அவர் வேறு யாரும் இல்லை பாலிவுட் நடிகை ஈஷா குப்தா. ஆனால் இதுகுறித்து ஈஷா தரப்பினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.

இருவரும் பார்ட்டி ஒன்றில் பார்த்துக்கொண்டதாகவும், அப்போதே ஒருவரை ஒருவர் பிடித்து போக இருவரும் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் வெளியில் அடிக்கடி பார்த்துக்கொண்டதாவும் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இரு தரப்பினரும் மவுனம் சாதிக்கின்றனர்.

Vignesh G:

This website uses cookies.