ஹர்திக் மற்றும் பாண்டியாவின் மீது மீண்டும் வழக்குப்பதிவு!

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் மீது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்துகொண்டனர்.அதில் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இதனால் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பின் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்தது.விசாரணை நடத்திய பிறகு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் மீது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதேபோல் கரன் ஜோஹர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாண்டியா மற்றும் ராகுலுக்கு 2 போட்டிகளுக்கு தடை விதிப்பதற்கு வினோத் ராய் பரிந்துரை செய்தார். ஆனால், நிர்வாகக் குழுவின் மற்றொரு உறுப்பினர் டயானா எடுல்ஜி, பிசிசிஐ-யின் சட்ட வல்லுநரிடம் எடுத்து சென்றார்.

அவர்கள், விதிமுறை மீறல் என்று கருத மறுப்பு தெரிவித்தனர். எனவே விசாரணை அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்தனர். இதற்கிடையில் பிசிசிஐ தொடர்பான வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா கோபால் சுப்ரமணியனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.

SYDNEY, AUSTRALIA – JANUARY 11: Hardik Pandya walks to the nets during the India ODI Series Training Session at SCG on January 11, 2019 in Sydney, Australia. (Photo by Matt King/Getty Images)

இந்நிலையில் ராகுல், பாண்டியாவிற்கு தண்டனை வழங்குவதை முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் (பிப்.6) முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி-20 போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா விளையாட தகுதி பெற்றுவிட்டார். அதேபோல், ஹர்திக் பாண்டியாவின் சகோதர் க்ருனல் பாண்டியாவும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாடுவார் என தெரியவந்துள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவிலான போட்டியில் முதல் முறையாக பாண்டியா சகோதர்கள் ஒரே அணியில் விளையாட உள்ளனர்.

Sathish Kumar:

This website uses cookies.