ஸ்டீபன் பிளமிங்  பயிற்சியாளர்… ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்; ஐபிஎல் தொடருக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த மேத்யூ ஹைடன் !!

ஸ்டீபன் பிளமிங்  பயிற்சியாளர்… ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்; ஐபிஎல் தொடருக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் ஐபிஎல் தொடருக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படாததால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இறுதி செய்வதிலும் தொடர்ந்து இழப்பறி நிலவி வருகிறது. அடுத்த சில தினங்களில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான மேத்யூ ஹைடன், ஐபிஎல் தொடருக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கிரிஸ் கெய்ல் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஹைடன், மிடில் ஆர்டரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள ஹைடன், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரசீத் கான் ஆகியோருக்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளார்.

பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், பும்ராஹ் மற்றும் லசீத் மலிங்கா ஆகியோருக்கு மேத்யூ ஹைடன் தனது சிறந்த ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளார்.

அதே போன்று இம்பேக்ட் வீரர்களாக டிவில்லியர்ஸ், சேன் வாட்சன், முகமது ஷமி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஹைடன், பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்கை தேர்வு செய்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.