கே.எல் ராகுல், பாண்டியா அதிரடி நீக்கம்; முதல் போட்டியில் இல்லை !!

கே.எல் ராகுல், பாண்டியா அதிரடி நீக்கம்; முதல் போட்டியில் இல்லை

காஃப் வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடலைத்தனமான கருத்துகளை ‘ஜாலி இளைஞர்கள்’ என்ற ஹோதாவில் செய்தது பாண்டியா, ராகுல் கிரிக்கெட் வாழ்க்கைக்கே சவாலாகும் நிலைமைகள் உருவாகியுள்ளன.

டிவி ஷோ-வில் பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசிய ஹர்திக் பாண்டியா, சற்றே அடக்கி வாசித்தாலும் சாராம்சத்தில் ஒன்றேயான ராகுலும் பேசியதால் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் இருவரையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு அணியில் தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டாம் என்று இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்ற நியமன நிர்வாகிகள் கமிட்டி உறுப்பினர் விநோத் ராய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

“பாண்ட்யா, ராகுல் இருவரும் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார் விநோத் ராய்.

இருவரது செயலுக்கான நடவடிக்கை குறித்து பிசிசிஐ சட்டப்பிரிவு துறையிடம் ஆலோசித்தனர், சட்டப்பிரிவு நடத்தை விதிகளை மீறிய கருத்துகளை பாண்டியாவும், ராகுலும் கூறினர் என்பதை உறுதி செய்ய மறுத்து விட்டது, இதனையடுத்து டயானா எடுல்ஜி ஆலோசனைப் படி விசாரணை நிலுவையில் உள்ளதால் இருவரையும் முதல் ஒருநாள் போட்டியில் ஆட வைக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

India’s Ravindra Jadeja, second left, celebrates with teammates the dismissal of West Indies’ Marlon Samuels during the fifth and last one-day international cricket match between India and West Indies in Thiruvananthapuram, India, Thursday, Nov. 1, 2018. (AP Photo/Aijaz Rahi)

“அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்பாக வீரர்களை இடைநீக்கம் செய்வது கட்டாயமாகும். மீ டூ புகார் எழுந்த சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி விவகாரத்தில் அவர் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்ட முடிவுக்கு ஒப்பானதாகும் இது” என்று சிஓஏ டயானா எடுல்ஜி  தெரிவித்துள்ளார்.

இருவரையும் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்புமாறு கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.

இவர்கள் அங்கிருந்து திரும்பினால், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே இவர்களுக்குப் பதிலாக இந்திய அணியுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சேன் மார்ஸ், ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளன் மேக்ஸ்வெல், நாதன் லயோன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹண்ட்ரூஃப்.

Mohamed:

This website uses cookies.