இந்திய அணியின் ‘ராக் ஸ்டார்’ யார் என்றால் டக்குனு சொல்லும் சமூகம் இன்று உருவாகிவிட்டது. அது ‘ஹர்திக் பாண்ட்யா’ என்று. மாஸ், ரேஜ், டெப்த் என்று இந்திய அணியின் மசாலா அபிவிருத்தியாக வலம் வருகிறார் ஹர்திக்
தனது இளம் வயதில், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க லாரியில் தான் பயணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். #majorthrowback எனும் ஹேஷ்டேக்குடன் தனது புகைப்படத்தை பதிவிட்ட ஹர்திக், கிரிக்கெட் மீதான தனது காதல், ஆர்வம் எந்தளவுக்கு இருந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். சற்று தினகளுக்கு முன் லேக்மீ அழகு நிறுவனம் நடத்திய பேஷன் ஷோவில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்தார், இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிரிக்கெட்டை தாண்டி அவருக்குப் பிடித்த விஷயங்கள் ஆகும்.
இதுமட்டுமில்லாமல் நட்டாஷா என்ற நடிகையுடன் சில தினங்களுக்கு முன்பு டேட்டிங் செய்ததாக செய்திகள் பரவியது. இந்தியில் பிரபலமான மியூசிக் வீடியோக்கள் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார் நட்டாஷா.
தற்போது ஹார்திக் பாண்டியா & நட்டாஷா காதல் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த ரசிகர்கள் பாண்டியாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தென் ஆப்ரிக்க தொடரில் சாதிக்க, ஹர்திக் பாண்டியா தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஹர்திக்.
இதுதொடர்பாக ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இன்றைய வலைப்பயிற்சி மிக சிறப்பாக சென்றது. பாய்ஸ் உடன் இணைய காத்திருக்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார். இந்த் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ‘பேட்டிங்’ பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக், முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பிரதான ‘ஷாட்டான’ ‘ஹெலிகாப்டர்’ ஷாட் அடிக்க முயற்சி செய்துள்ளார்.