2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள ஆமதாபாத் அணி, மூன்று நட்சத்திர வீரர்களை தனது அணியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்துப் பல அதிரடி முடிவுகளை வெளியிட்டு வரும் அகமதாபாத் அணி தனது அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கடந்த சில நாட்களுக்கு முன் நியமித்துள்ளது.
இந்த நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதால் புதிதாக இணைந்துள்ள அணிகள் 3 வீரர்களை தங்களது அணியில் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்ற விதி உள்ளது, இதன் காரணமாக ஆமதாபாத் அணி விடுவிக்கப்பட்ட வீரர்களில் இருந்து வலைவீசி 3 வீரர்களை தனது அணியில் இணைத்துள்ளது.
அப்படிப்பட்ட 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம்வந்த ஹர்திக் பாண்டியா முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார், இருந்தபோதும் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தனது அணியில் தக்கவைத்துக்கொள்ளும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 2022 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இவரை மும்பை அணி நீக்கிவிட்டது.
இந்த நிலையில் ஆமதாபாத் அணி தனது முதன்மை வீரராக 15 கோடி கொடுத்து ஹர்திக் பாண்டியாவை தனது அணியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.