ஐ.பி.எல் தொடரை இப்படி நடத்தலாம்; ஐடியா கொடுக்கும் ஹர்திக் பாண்டியா
ரஞ்சி போட்டிகளில் ரசிகர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் விளையாடிய அனுபவம் உள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்தலாம் என்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI
இந்நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘‘ரசிகர்கள் கூட்டம் இல்லாத நிலையில் ரஞ்சி கோப்பை போட்டியில் நான் விளையாடியுள்ளேன். அதன் உணர்வு வித்தியாசமானது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகளும் அப்படி நடந்தால் சிறந்த ஆப்சனாக இருக்கும். குறைந்த பட்சம் மக்கள் வீட்டில் இருந்தே போட்டியை பார்க்க முடியும்’’ என்றார்.