மீண்டும் அணிக்குள் வரும் இந்திய அதிரடி நட்சத்திரம்: ரசிகர்கள் ஜாலி

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து, தற்போது மைதானத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளார் பாண்டியா. அறுவை சிகிச்சை முடிந்து, குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வுக்குப் பிறகே மீண்டும் சர்வதேச ஆட்டங்களில் பாண்டியா பங்கேற்பார் என முதலில் சொல்லப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மைதானத்துக்குத் திரும்பி பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் பாண்டியா. இங்கு வந்து நீண்ட நாளாகிவிட்டது. மைதானத்துக்குத் திரும்புவதை விடவும் வேறு நல்ல உணர்வு கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் விதமாகப் பயிற்சிகள் எடுக்கும் விடியோவையும் பகிர்ந்துள்ளார்.

MANCHESTER, ENGLAND – JUNE 16: Hardik Pandya of India hits out during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and Pakistan at Old Trafford on June 16, 2019 in Manchester, England. (Photo by Stu Forster-IDI/Stu Forster-IDI)

25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தோனி மீண்டும் எப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

India’s Virat Kohli speaks with Hardik Pandya (R) during the first One Day International cricket match between South Africa and India at Kingsmead cricket ground on February 1, 2018 in Durban. / AFP PHOTO / ANESH DEBIKY (Photo credit should read ANESH DEBIKY/AFP/Getty Images)

இந்நிலையில் தோனியின் எதிர்கால முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை பொருத்துவரை ரிஷப் பன்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஆட்டத்தை பார்த்தே தோனி தனது முடிவை அறிவிப்பார். அதுவும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் அவர் தனது முடிவை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.