கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதற்கு பிறகு இந்திய அணிக்காக தோனி விளையாடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, தோனியின் ஓய்வு குறித்து மூத்த வீரர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி, இளம் வயதில் அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பாட்மிண்டன் ஆகியவையே.
தோனி படித்த பள்ளியின் கிரிக்கெட் அணியில் வழக்கமாக விளையாடும் விக்கெட் கீப்பர் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட, அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார். அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை.
பள்ளியில் விளையாடும்போது தோனியின் பேட்டிங்கிற்கும், அவரது பிரத்தியேக ஷாட்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
மிகவும் சாதாரணமான பின்னணியில் பிறந்து வளர்ந்த தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை.
சிசிஎல், பிகார், ஜார்க்கண்ட் இந்தியா ஏ, கிழக்கு மண்டலம் என பல அணிகளில் விளையாடிய தோனியின் பெயர், 2000 முதல் இந்தியா மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிகளில் இடம்பெற வாய்ப்புள்ளவர்கள் குறித்த செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்றது.
இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த டி20 கிரிக்கெட் போட்டியில் தோனி நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸினால் உலகக்கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், தோனி அடுத்த உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா..? என்ற கேள்விக்குறி எழுந்தது.
தோனியின் தலைமையில்தான் இந்திய அணி ஐசிசியின் 3 உலகக்கோப்பைகளையும் இந்தியா வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஒரு எம்.எஸ்.தோனி மட்டும்தான் என்று கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுபற்றிய அவரின் பதிவில் “ ஒரே ஒரு எம்.எஸ்தோனி மட்டும்தான். எனது வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகம் அளித்தமைக்கு எனது நண்பர் மற்றும் மூத்த சகோதரரான தோனிக்கு நன்றி. இனி நீலநிற ஜெர்சியில் உங்களுடன் விளையாடுவதை பார்க்கமுடியாது என்பது வருத்தமாக உள்ளது. ஆனால் நீங்கள் எப்போதும் எனக்காக இருப்பீர்கள், எனக்கு வழிகாட்டுவீர்கள்” என்று கூறியுள்ளார்