கேப்டன் பொறுப்புன்னு வந்துட்டா.. ஹர்திக் பாண்டியா தோனி மாதிரி செயல்படுகிறார் – முன்னாள் இந்திய வீரர் கருத்து!

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பொறுப்பு சற்று தோனியை ஓத்ததாக இருக்கிறது. நன்றாக போட்டிகளை கணித்து செயல்படுகிறார் என கருத்து தெரிவித்திருக்கிறார் அணில் கும்ப்ளே.

அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ள இந்த வருட ஐபிஎல் சீசனில் முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

கடந்த சீசனில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா கோப்பையையும் தட்டிச்சென்று பலரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த வருடம் குஜராத் டைட்டன்ஸ் அணி மிகவும் பேலன்ஸ் அணியாக காணப்படுகிறது என்பதால், கேப்டன் பொறுப்பில் ஹர்திக் பாண்டியா இந்த வருடம் எப்படி செயல்படப்போகிறார் என்பதை பார்க்க பலரும் ஆவலாக இருக்கின்றனர்.

அதேபோல் இந்த வருடம் தோனிக்கு கடைசி சீசன் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அவர் இத்தனை வருடம் ஐபிஎல் வரலாற்றில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கிறார். வெளியில் செல்லும்பொழுது கௌரவத்துடன் செல்வார் என்றும் பார்க்கப்படுகிறது. ஆகையால் சீசன் முழுவதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது.

தோனியின் கேப்டன் பொறுப்பில் ஹர்திக் பாண்டியா பல போட்டிகளில் விளையாடுகிறார். ஆகையால் தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பொறுப்பு தோனியைப் போலவே இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கிறார் அணில் கும்ப்ளே. அவர் கூறியதாவது:

“ஹர்திக் பாண்டியா போட்டிகளை கணித்து வீரர்களை பயன்படுத்தும் திறன் தோனியைப் போலவே இருக்கிறது. மேலும் பேட்டிங் வரிசையையில் உறுதியாக ஒரு இடத்தில் இறங்காமல் அணியின் தேவைக்குஏற்ப மாறிமாறி இறங்குகிறார். எந்த வீரரை எங்கே இறக்கினால் சரியாக இருக்கும். மேலும் இந்த பந்துவீச்சாளரை எத்தகைய சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மிகச்சரியாக கணித்து செயல்பட்டு வருகிறார்.

ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய போது, பினிஷிங் ரோலில் செயல்பட்டார். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வந்த பிறகு அவருக்கு என்று உறுதியான ஒரு இடம் இதுவரை இல்லை. பல நேரங்களில் நான்காவது வீரராக களம் இறங்கினாலும், சில போட்டிகளில் பினிஷிங் செய்கிறார். இன்னும் சில போட்டிகளில் மூன்றாவது இடத்திலும் களமிறங்கி பேட்டிங் செய்கிறார்.

போட்டிக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டு ஒரு முழுமையான வீரராகவே இருக்கிறார். இவையனைத்தும் மற்ற கேப்டன்களிடம் பார்க்க முடியாது. தோனிக்கு இருக்கும் தனிப்பண்பு. ஹர்திக் பாண்டியா, இவற்றை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டது என புரிந்துகொள்ள முடிகிறது.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் அணில் கும்ப்ளே.

Mohamed:

This website uses cookies.