ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆக இருக்கிறார். இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தவர். அணியில் இடம் பிடித்தவுடன் மடமடவென வளர்ந்தவர். இவர் ஒரு காலத்தில் தனது காருக்கு மாதத் தவணை செலுத்த முடியாமல் காரை ஒளித்து வைத்திருப்பதாக கூறியவர்.
தற்போது மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் வீடு கட்டியும், பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை வாங்கியும் வைத்து ஆடம்பரமாக இருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாலே தெரியும். அவர் அணியும் ஆபரணங்கள், அவர் அணியும் உடைகள், அவர் வெளியே சென்று வரும் கார் அனைத்தும் அதிகபட்ச விலை மிக்கது.
சமீபத்தில்கூட தோனியின் பிறந்தநாளன்று 87 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு தனியார் நிறுவன விமானத்தை வாடகைக்கு எடுத்து டோனியின் வீட்டிற்கு சென்று அவரை வாழ்த்தி வந்தார் இவர். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். இந்த கைக்கடிகாரத்தின் விலை என்ன தெரியுமா.
இது Rolex Oyster Perpetual Daytona இந்த கம்பெனி உடையது. இதன் விலை 8 லட்சத்து 60 ஆயிரத்து 700 ரூபாய். இது இந்திய குடிமகன் ஒருவனின் சராசரியை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்திய குடிமகன் ஒருவன் சராசரியாக ஒரு வருடத்திற்கு 16,000 ரூபாய் தான் சம்பாதிக்கிறான் என புள்ளிவிவரம் சொல்கிறது..
இந்த கடிகாரம் 18 கேரட் தங்க முலாம் பூசப்பட்டது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது 243 வைரங்கள் போதிக்கப்பட்டது. அதனை தாண்டி இவர் 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கை கடிகாரத்தையும் வைத்திருக்கிறார். தகவலின்படி சென்ற வருடத்தில் மட்டும் இவர் வெறும் 24 கோடி ரூபாய் கிரிக்கெட்டிலிருந்து மற்றும் சம்பாதித்தது தெரியவந்துள்ளது. எண்ணிப்பார்த்தால் மொத்தம் தற்போது அவரிடம் நூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.