காலவரையற்ற விடுமுறையில் செல்ல விரும்புவதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்கௌர் தெரிவித்தார்.
மே.இ.தீவுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், ஹர்மன்ப்ரீத் கௌரும், அணி நிர்வாகமும் இணைந்து மூத்த வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காமல் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் பங்கு இருப்பதாக புகார் எழுந்தது.
மிதாலி ராஜ் அவருக்கு எதிராக சரமாரியாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, பவாரின் பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிதாலி ராஜ் கேப்டனாகவும், டி20 அணிக்கு ஹர்மன்ப்ரீத் கௌர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
அதன்பிறகு, மிதாலி ராஜுக்கும், தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கௌர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அவர் காலவரையற்ற விடுமுறையில் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனியார் விளையாட்டு செய்தி இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறேன்.
இதனால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சகாலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.
ந்திய அணியில் கோஹ்லி, தோனி என பல ‘மேட்ச் வின்னர்’ உள்ளனர். இம்முறை, உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம்,’’ என, இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்தார்.
இங்கிலாந்து மண்ணில் இன்னும் 7 நாட்களில் (மே 30) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இம்முறை கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். இதற்கு, கேப்டன் கோஹ்லி பேட்டிங், தோனியின் துடிப்பான ‘கீப்பிங்’, பும்ராவின் துல்லிய ‘யார்க்கர்’ என கைகொடுக்க பல விஷயம் உள்ளன.
இந்திய பெண்கள் ஒரு நாள் கேப்டன் மிதாலி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட வீடியோ செய்தியில்,‘ ஒரு அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வேண்டும். தவிர, பவுலர்கள் எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவது அவசியம். விராத் கோஹ்லியின் சிறப்பான தலைமையின் கீழ் இந்திய அணி களம் காண்கிறது. ரோகித்– தவான் ஜோடி, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா என பலமான அணியாக உள்ளது.
கீப்பிங்கில் கைதேர்ந்த அனுபவ வீரர் தோனி இருப்பதால் யாராவது ஒருவரை மட்டும் ‘மேட்ச் வின்னராக’ கூற முடியாது. இந்திய அணியில் வெற்றிக்கு கைகொடுக்க திறமையுடன் பலர் வலம் வருகின்றனர். ஒரு நாள் அரங்கில் அசத்தி வருவதால், கோப்பை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். இங்கிலாந்து அணி தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று வருகிறது. சொந்த மண்ணில் போட்டிகள் நடப்பது சாதகமானது. இதனால், இங்கிலாந்து அணியும் கோப்பை கைப்பற்றலாம்,’ என, தெரிவித்துள்ளார்.