இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் ஹைதராபாத் அணியால் 13.25 ரூபாய்க்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆளாக கேன் வில்லியம்சன் ஏலத்தில் சென்றிருக்கிறார்.
ஐபிஎல் ஏலத்தில் முதல்முறையாக பங்கேற்ற இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஐபிஎல் ஏலத்தில் 13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.
இவர் பாகிஸ்தான் அணியுடன் நடந்த டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். பாகிஸ்தான் மைதானங்கள் இந்திய மைதானத்தை போலவே இருக்கும் என்பதால் இவர் மீது ஐபிஎல் அணிகள் கவனம் செலுத்தினர்.
ஆரம்ப விலையாக இரண்டு கோடி ரூபாய்க்கு இருந்த இவரை எடுப்பதற்கு ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் போட்டி போட்டன. கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் வரை போட்டியிட்டு வந்த ராஜஸ்தான் அணியின் பர்ஸில் மொத்தமே 13 கோடி ரூபாய் தான் இருந்ததால் ,அதற்கு மேல் ஏலம் கேட்க முடியவில்லை.
இறுதியில் 13.25 கோடி ரூபாய்க்கு ஹரி புரூக்சை எடுத்தது ஹைதராபாத் அணி எடுத்தது. அந்த அணியிடம் மொத்தம் 42.75 கோடி ரூபாய் இருந்தது. அதிலிருந்து 13 கோடி ரூபாய் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரி புரூக்ஸ் பாகிஸ்தான் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் ஐந்து இன்னிங்ஸில் கிட்டத்தட்ட 470 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல் 7 டி20 போட்டிகளில் 5 போட்டிகளில் பங்கேற்ற அவர் 260 ரன்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டியிடிலும் டி20 இன்னிங்ஸ் விளையாடுவதால் இவர் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அவர் ஏலம் சென்று இருக்கிறார்.
இத்தனை கோடி கொடுத்து எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அவர் எவ்வாறு செயல்படுவார்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னதாக ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் ஐபிஎல் ஏலத்தில் ஆரம்ப விலையாக 2 கோடி ரூபாய்க்கு பங்கேற்றார். ஆனால் அவரை எடுப்பதற்கு எந்த அணியும் முன்வரவில்லை. ஏனெனில் சமீப காலமாக அடிக்கடி காயம் ஏற்பட்டு அணியை விட்டு வெளியேறி விடுகிறார். இறுதியில் 2 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை எடுத்தது.