இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் அணியை அறிவித்த ஹர்ஷா போகல்; தோனிக்கு இடமில்லை !!

இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் அணி இது தான்; ஹர்ஷா போகல் 

2018ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்கள் கொண்ட சிறந்த ஆடும் லெவனை முன்னாள் வீரர் ஹர்ஷா போகல் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடருடன் தொடங்கியது. இந்த ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியது. பின்னர் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் என இந்த ஆண்டு இந்திய அணிக்கு படுபிசியாகவே அமைந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே.

இந்த அணியின் தொடக்க வீரர்களாக சற்றும் யோசிக்காமல் எந்தவித தயக்கமுமின்றி ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவானை தேர்வு செய்துள்ளார். இந்த ஆண்டு ரோஹித் – தவான் தொடக்க ஜோடிக்கு மற்றுமொரு சிறந்த ஆண்டாகவே இருந்தது. இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர். ரோஹித் சர்மா 73.57 என்ற சராசரியுடன் இந்த ஆண்டில் 1030 ரன்களையும் தவான் 897 ரன்களையும் குவித்துள்ளனர்.

மூன்றாம் வரிசை வீரராக சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலியை தேர்வு செய்ததிலும் எந்தவித ஆச்சரியமும் இருக்காது. ஏனெனில் அந்த இடத்தை அவரைத்தவிர வேறு எந்த வீரராலும் அவ்வளவு சிறப்பாக நிரப்பிவிடமுடியாது.

நான்காம் வரிசை வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட்டையும் ஐந்தாம் வரிசை வீரராக விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஷாகிப் அல் ஹாசன் மற்றும் இலங்கையின் திசாரா பெரேரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 ஆல்ரவுண்டரான ரஷீத் கான் மற்றும் இந்தியாவின் சைனாமேன் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஸ்பின்னர்கள். பும்ரா மற்றும் ரபாடா ஆகிய இருவரையும் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி என ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ள அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஷாகிப் அல் ஹாசன், திசாரா பெரேரா, ரஷீத் கான், குல்தீப் யாதவ், ரபாடா, பும்ரா.

 

Mohamed:

This website uses cookies.