தோனியை நான்காவது வீரராக களமிறக்க வேண்டும்; ஹர்ஷா போகல் சொல்கிறார்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை நான்காவது வீரராக களமிறக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போகல் தெரிவித்துள்ளார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.
கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், உமேஷ்யாதவ், சித்தார்த் கவூல் ஆகியோர் நீக்கப்பட்டு தினேஷ்கார்த்திக், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது,மேலும் இந்த போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடிய தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது, தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.
சேவாக், கம்பீர் போன்ற வீரர்களே தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், பிரபல கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போகல் தோனியை நான்காவது வீரராக களமிறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்ஷா போகல் கூறியதாவது, “இந்த தொடரி மூலம் இந்திய அணி நிறைய விசயங்களை கற்று கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். நான்காவது வீரரை தேர்வு செய்வதில் இந்திய அணி பின்னடைவையே சந்தித்து வருகிறது. சுரேஷ் ரெய்னா, ராகுல், தினேஷ் கார்த்திக், யுவராஜ் சிங், மணிஷ் பாண்டே என யாரும் தங்களை நிலை நிருத்தி கொள்ளவில்லை.
தோனியை நான்காவது வீரராக களமிறக்க வேண்டும், தோனி மிகப்பெரும் ஜாம்பவான், அவர் ஏழாவது இடத்தில் களமிறக்கப்படுவது தான் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறது. தோனி நான்காவது இடத்தில் களமிறக்கப்பட்டால் மட்டுமே அது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும், இல்லையென்றால் இந்திய அணி மாற்று வழியை யோசிக்க வேண்டும்” என்றார்.