2022ன் சிறந்த டெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்திருக்கிறார் ஹர்ஷா போக்லே.
2022ம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பல திருப்பங்கள் நடந்திருக்கின்றன. இந்தாண்டு முடிவில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் இருக்கின்றன.
2022ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்லே. அதை நாம் இங்கு காண்போம்.
துவக்க வீரர்களாக ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் விண்டீஸ் வீரர் கிரேய்க் ப்ராத்வெய்ட் இருவரும் இருக்கின்றனர். கவாஜா 67.5 சராசரியுடன் 1080 ரன்கள் அடித்துள்ளார். ப்ராத்வெய்ட் 14 இன்னிங்சில் 687 ரன்கள் அடித்துள்ளார்.
3வது மற்றும் 4வது இடத்தில் பாபர் அசாம் மற்றும் ஜோ ரூட் இருவரும் இருக்கின்றனர். பாபர் அசாம் இந்த ஆண்டு அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரராகவும் இருக்கிறார். 16 இன்னிங்சில் 1170 ரன்கள் அடித்துள்ளார். ஜோ ரூட் 1098 ரன்கள் அடித்துள்ளார்.
5வது இடத்தில் ஜானி பேர்ஸ்டோ இருக்கிறார். இவர் 19 இன்னிங்சில 1061 ரன்கள் அடித்துள்ளார். 6வது இடத்தில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். 870 ரன்கள் மற்றும் 26 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
7வது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார். கிட்டத்தட்ட 600 ரன்களும் மற்றும் கீப்பிங்கில் அசத்தியதால் அணியில் இடம்பிடித்திருகிறார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்கா வேகப்பந்துவீச்சு ஜோடி மார்கோ ஜான்சன் மற்றும் காகிசோ ரபாடா இருவரும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் நாதன் லயன் இருக்கிறார். ரபாடா மற்றும் லயன் இருவரும் இந்தாண்டு டெஸ்டில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக இருக்கிறார்கள்.
கடைசியாக, 11வது வீரராக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். இவர் இந்தாண்டு 36 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
சிறந்த டெஸ்ட் அணி:
உஸ்மான் கவாஜா, க்ரேய்க் ப்ராத்வெய்ட், ஜோ ரூட், பாபர் அசாம், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட், மார்கோ ஜான்சன், காகிசோ ரபாடா, நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.