ஹர்ஷா போக்லேவின் இந்த வருட டி20 XI

ஹர்ஷா போக்லேவின் இந்த வருட டி20 XI

இந்த வருடம் முழுவதும் அனைத்து சர்வதேச அணிகளுகளும் அதிக டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. சொல்லப்போனால் இந்திய அணி இந்த வருடம் தான் அதிக டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அனைத்து அணி வீரர்களும் தங்களை நிரூபிக்க களத்தில் இறங்கி போராடினர். பல புதிய வீர்ரகள் அறிமுகமானார்கள்.

தற்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள 2017ன் சிறந்த டி20 அணியை பார்ப்போம் :

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து மூன்று பேர், இங்கிலாந்து அணியில் இருந்து இரண்டு பேர், தென்னாப்பிரிக்க அணியில் கருத்து இரண்டு பேர், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணியில் இருந்து தலா ஒருவர், இந்திய அணியில் இருந்து இரண்டு பேரைத் தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா.

1.எவின் லெவிஸ் – வெஸ்ட் இண்டீஸ்

ஒப்பனிங் பேட்ஸ்மேனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் எவின் லெவிஸ் தேர்வு செயப்பட்டுள்ளார்.

2.அலெக்ஸ் ஹேல்ஸ் – இங்கிலாந்து

மற்றோரு ஒப்பானராக இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3.ஏ.பி.டி.வில்லியர்ஸ் – தென்னாப்பிரிக்கா

டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவில் டி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடக்கூடியவர் என நெ.3ல் இவரை தேர்வு செய்யதுள்ளார் ஹர்ஷா.

4. ஜோஸ் பட்லர் – இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான இவர் அதிரடியாஹா ஆடப் கூடியவர். அதனுடன் சேர்த்து கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5.டேவிட் மில்லர் – தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் இந்த வருடம் அதிவேக சதம் அடித்து துவம்சம் செய்தார்.

6.கெய்ரோன் பொல்லார்ட் – வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெய்ரோன் பொல்லார்ட் அதிரடியாக ஆட இந்த இடத்தை
பிடித்துள்ளார்.

7.சுனில் நரைன் – வெஸ்ட் இண்டீஸ்

இந்த அணியில் சுழற்பந்து வீச்சாளராக ஹர்ஷா போக்லேவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8.ரசித் கான் – ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ரசித் கான் இதில் இடம் பிடித்துள்ளார்.

9.புவனேஸ்வர் குமார் – இந்தியா

இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார்

10.ஜஸ்ப்பிரிட் பும்ரா – இந்தியா

யார்க்கர் மன்னன் ஜஸ்ப்பிரிட் பும்ரா ஹர்ஷாவின் இந்த வருட டி20 அணியில் இடம் பிடித்துள்ளார்.

11.முகமது ஆமிர் – பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் தற்போதைய சிறந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர்.

Editor:

This website uses cookies.