சுடிதார் வீராங்கனை கவிதா, உலக மல்யுத்தத்தில் களமிறங்குகிறார்

மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா.

முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் போட்டியில், கவிதா தேவி பங்கேற்றார்.

பிபி புல் புல் என்ற வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி வீசிய காட்சி வீடியோவில் பரவியது. அந்தப் போட்டியில் கவிதா தோல்வியடைந்தாலும், மஞ்சள் நிற சுடிதார் அணிந்து அவர் பங்கேற்ற வீடியோ வெகு வேகமாக பரவியது.

மிகப் பிரபலமான மல்யுத்த வீரரான, பஞ்சாப்பை சேர்ந்த கிரேட் காளியிடம் பயிற்சி பெற்றவர் கவிதா. தற்போது டபிள்யூடபிள்யூஇ அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதல் இந்திய பெண் என்ற பெருமை கவிதாவுக்கு கிடைத்துள்ளது. இந்த போட்டிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இவருடன், ஜோர்டானை சேர்ந்த ஷாதியா பெய்ஸோ என்ற பெண்ணும், ஒப்பந்தம் செய்துள்ளார். அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். மல்யுத்தத்தில் களமிறங்கப் போவதும் இதுவே முதல் முறையாகும்

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.