என் கேரியரில் இவருக்கு பந்துவீசியது தான் மிகுந்த பயத்தை தந்தது; பாக்., வீரர் உடைத்த ரகசியம்! அது ஒரு இந்திய பேட்ஸ்மேனாம்..

இந்த இந்திய பேட்ஸ்மேனுக்கு பந்துவீச மிகவும் கடிமாக இருந்தது என பாக்., அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி மனம்திறந்து பேசியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் திறம்படைத்த வேகப்பந்துவீச்சாளர்களை உலகிற்கு கொடுப்பதில் பாக்., கிரிக்கெட் நிர்வாகம் முக்கிய பங்களித்து வருகிறது. இம்ரான் கான், வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், முஹம்மது அமீர் மற்றும் தற்போது இருக்கும் ஹசன் அலி ஆகியோர் பாக்., கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியுடனான போட்டி குறித்தும் அதில் ரோஹித் ஷர்மாவிற்கு பந்துவீசியது குறித்தும் தனது மனதில் இருந்தவற்றை வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், குறிப்பாக, ஹசன் அலி தான் பந்துவீசியதிலேயே யார் கடினமான பேட்ஸ்மேன் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நான் நிறைய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலிங் செய்திருக்கிறேன். அதில் ரோஹித் சர்மாவிற்கு பந்துவீச மிகவும் கடினமானதாக இருந்தது. இந்திய அணியுடனான ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைகளில் அவர் அபாரமாக ஆடினார். 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவருக்கு நான் பவுலிங் செய்ய பந்துவீச சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை நான் நல்ல விஷயமாக பார்க்கிறேன். இல்லையெனில், எனது பந்துவீச்சை விளாசியிருக்க கூடும்.

அவருக்கு நேரம் கொடுத்துவிட்டால் பந்தை எந்த பக்கமும் அடிக்கக்கூடியவர். அதுதான் அவரது கூடுதல் பலமாக நான் பார்க்கிறேன். புல் ஷாட் ஆடுவதில் திறம்வாய்ந்த வீரராக இருப்பதால், வேகப்பந்துவீச்சாளர்களை அனாயசமாக எதிர்கொள்கிறார். ஆகையால், பலரும் அவருக்கு பந்துவீச சிரமப்படுகிறார்கள் என்று நான் பார்க்கிறேன் என தனது அனுபவத்தையும் கருத்தையும் பகிர்ந்து கொண்டார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை போட்டி என இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளிலும் ரோஹித் சர்மா சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.