தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரிமியர் லீக் கடைசி கட்ட நிலையை எட்டியுள்ளது. இந்த ஐபில்-இல் மீதம் இருக்கும் மூன்று போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் ஆகிய ஹஷிம் ஆம்லா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இல்லாமல் களமிறங்க போகிறது.
தென்னாபிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கலந்து கொள்கிறது. இந்நிலையில் இரண்டு பயிற்சி போட்டிகள் மே 19 மற்றும் 21 ஆம் தேதி நடக்கிறது. இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் வீரர்கள் ஹஷிம் ஆம்லா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பினர்.
இந்த ஐபில் தொடரில் ஹஷிம் ஆம்லா கலக்கி கொண்டிருக்கிறார். இந்த ஐபில்-இல் இரண்டு சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார் ஹஷிம் ஆம்லா.
ஹஷிம் ஆம்லா, இந்த ஐபில்-இல் 10 போட்டியில் 420 ரன், சராசரியாக 60 ரன் அடித்துள்ளார். ஆனால் இந்த ஐபில்-இல் டேவிட் மில்லர் சொல்லிக்கொள்ளும் போல் விளையாடவில்லை. அவர் 5 போட்டிகளில் விளையாடி 87 ரன் மட்டுமே குவித்துள்ளார்.
இருவரும் மே 8-ஆம் தேதி காலையில் தென்னாப்ரிக்காவுக்கு கிளம்பினர். இந்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார் டேவிட் மில்லர்.
இந்த ஐபில்-இல் 11 போட்டிகள் விளையாடியுள்ள கிங்ஸ் XI பஞ்சாப் அணி 5 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில உள்ளது. மீதம் இருக்கும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.