இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த டீம் தான்; ஹசீம் ஆம்லா கணிப்பு !!

இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத போவது இந்த டீம் தான்; ஹசீம் ஆம்லா கணிப்பு

தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஹசீம் ஆம்லா, நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணி குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா,நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதி நவம்பர் 15ம் தேதி நடைபெற இருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும், 16ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன.

இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வரும் நிலையில், முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரரான ஹசீம் ஆம்லா, நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஹசீம் ஆம்லா பேசுகையில், உலகக்கோப்பை கிர்க்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் முன்னேறும் என்பதே எனது கருத்து என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை போலவே பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக திகழும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, நடப்பு தொடரில் 9 போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் மட்டும் தென் ஆப்ரிக்கா அணி தோல்வியை சந்தித்தது.

Mohamed:

This website uses cookies.