ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக அவர் சர்வதேச போட்டியில் விளையாடத் தொடங்கியது முதல், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் மத்தியில் முதல் இடத்தில் அவரே இருக்கிறார். சுமார் 611 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்திய ரசிகர்களை பொருத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்றுதான் அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் கிடையாது என்று கூறியிருப்பது அனைத்து இந்திய ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சோபிக்காத அஸ்வின்
இதுபற்றி அவர் விளக்கமாக கூறுகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் மட்டுமே மிக சிறப்பாக விக்கெட்டுகளை கைப்பற்றுவார். வெளிநாடுகளில் குறிப்பாக தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவர் மிக சிறப்பாக பந்து வீசியது கிடையாது.
அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் எது என்றால் அவர் இந்த நான்கு நாடுகளில் ஒரு முறை கூட 5 விக்கெட் ஹால் ( ஒரு போட்டியில் நடக்கும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவது ) கைப்பற்றியது கிடையாது. மேலும் அவர் கைப்பற்றிய அனைத்து 5 விக்கெட் ஹாலும் இந்திய நாட்டில் கைப்பற்றியது தான் என்று கூறியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் போல செயல்படும் ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல்
அதை போலவே இந்திய நாட்டில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் கடந்த 4 ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தை நிரப்பியிருக்கிறார். மேலும் இந்தாண்டு துவக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினை விட அக்ஷர் பட்டேல் மிகச் சிறப்பாக பந்து வீசினார். எனவே இவற்றின் அடிப்படையில் ரவிச்சந்திரன் அஷ்வின் என்னை பொறுத்தவரையில் தலை சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இதற்கு இந்தியர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு பல போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளார். அவரை இவ்வாறு கூறுவது சரியில்லை என்று கூறி வருகின்றனர்.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி, தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.