தோனி என்னிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை; 2018 நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை வெளியிட்டு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் !!

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகற அணியாக பயணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணமே அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு பல கோப்பைகளை வெற்றி பெற்று கொடுத்த தோனி அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டு தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

என்னதான் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தாலும் அவருடைய கிரிக்கெட் அறிவு இன்னும் சிறப்பாகவே உள்ளது, இதன் காரணமாக உலகெங்கும் இருக்கும் பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவரிடம் அனுபவங்களைக் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

அந்த அளவிற்கு கிரிக்கெட் அறிவு அதிகம் பெற்ற மகேந்திரசிங் தோனி 2018 இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் செய்த தரமான சம்பவத்தை லுங்கி இங்கிடி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அதில் இங்கிடி தெரிவித்ததாவது, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போது, தீபக் ஹூடா மிக சிறந்த முறையில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது 17வது ஓவரை வீச நான் முயற்சித்த போது என்னிடம் எந்த ஒரு வார்த்தையும் கேட்காமல் தோனி அவராகவே பீல்ட்செட் செய்துவிட்டார், இதன் காரணமாக அடுத்த இரண்டு பந்துகளில் தீப ஹுடாவின் விக்கெட்டை வீழ்த்த முடிந்தது, அப்பொழுதுதான் நான் அதை கவனித்தேன், இறுதிப்போட்டியில் அப்படி ஒரு பதட்டமான நிலைமையிலும் தோணி மிக அருமையாக முடிவெடுத்து சக வீரர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய விஷயங்களை அப்பொழுது செய்தார், என்பதை லுங்கி இங்கிடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.