கேஎல் ராகுல் நிச்சயமாக இந்திய அணிக்காக உலக கோப்பை டி20 தொடரில் விளையாடுவார் – சல்மான் பட்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் இந்திய வீரர்களை எந்த வீரர் உலக கோப்பை டி20 தொடரில் ஒப்பனிங் வீரராக களம் இறங்குவார் என்று கணித்துள்ளார். மேலும் பிரித்வி ஷா விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்தும் அவர் அண்மையில் கூறியுள்ளார்.
கேஎல் ராகுல் தான் முதல் வீரராக தேர்ந்தெடுக்கப்படுவார்
கேஎல் ராகுல் இந்திய அணிக்காக குறிப்பாக டி20 தொடர்களில் மிக சிறப்பாக விளையாடுபவர். இந்திய அணிக்காக பல டி20 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் கூட அவர் மிகச் சிறப்பாக விளையாடுவது அனைவருக்கும் தெரியும். எனவே உலக கோப்பை டி20 தொடரில் நிச்சயமாக ரோகித் சர்மா உடன் இணைந்து இவர் ஓபனிங் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
இவர் அணியில் விளையாடினார் நன்றாக பேட்டிங் செய்வது மட்டுமல்லாமல் கீபிங் செய்வதன் மூலம் அணி கேப்டனுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் வீரரையோ அல்லது ஒரு நல்ல பேட்ஸ்மேனை கேப்டன் தேனெடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதனடிப்படையில் கேஎல் ராகுல் நிச்சயமாக டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் மிக சிறப்பாக விளையாட வில்லை என்றாலும் அதன் பின்னர் தற்போது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 331 ரன்கள் குவித்துள்ளார். அவர் தற்பொழுது நல்ல பார்மில் உள்ளார் எனவே அவரை இந்திய அணி முதல் போட்டியில் இருந்து விளையாட வைக்கும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று சல்மான் கூறியுள்ளார்.
பிரித்வி ஷாவுக்கு இன்னும் கால அவகாசம் தேவை
ஷாவுக்கு தற்பொழுது 21 ஒரு வயது ஆகி உள்ளது. சென்ற ஆண்டு வரை அவர் எப்பொழுதும் ஒரே மாதிரி ஷாட்டுகளை அடித்து விளையாடுவார் அதன் காரணமாகவே சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவரால் சிறப்பாக பங்களிக்க முடியாமல் போனது. டெல்லி அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி வெறும் 228 ரன்கள் மட்டும் தான் குவித்து இருந்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 ரன்களை மட்டும்தான் குவித்தார் எனவே அதிலிருந்து இந்திய அணி அவரை புறக்கணித்தது.
இருப்பினும் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில், அணியின் கேப்டனாக தனது அணியை சிறப்பாக வழிநடத்தி மேலும் 7 போட்டிகளில் 827 ரன்கள் குவித்து இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய சாதனையை அவர் படைத்தார். அதில் நான்கு சதங்களும் ஒரு இரட்டை சதமும் அடங்கும். அதன் பின்னர் தற்போது கூட டெல்லி அணிக்காக இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 308 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அவரை இந்திய அணி மீண்டும் விளையாட வைக்கும், அதன்படி பார்க்கையில் தற்போது இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வைக்கும். அவர் நன்றாக விளையாடினால் நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடரில் ஒரு வீரராக அவரும் தேர்ந்தெடுக்கப்படுவார். எனினும் சூழ்நிலை குறித்து தான் அவருக்கு உலக கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் சல்மான் இறுதியாக கூறி முடித்தார்.