உலக கோப்பை டி20 தொடரில் மகேந்திர சிங் தோனி செய்த வேலையை இவர்தான் கண்டிப்பாக செய்யப்போகிறார்- முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை

உலக கோப்பை டி20 தொடர் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சூடு பிடித்துள்ளது. 12 அணிகள் பங்கேற்க போகும் உலக கோப்பை டி20 தொடரில் இரண்டு குரூப் அணிகளை தற்பொழுது ஐசிசி வெளியிட்டுள்ளது. குரூப் ஏ அணியில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பணியில் இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் நான்கு அணிகள் தகுதி சுற்று போட்டியில் தகுதி அடைந்தவுடன் இந்த இரண்டு குரூப்களில் இணைந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இதற்கு முன்னால் இந்திய அணிக்கு எப்படி இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடினார் அதேபோல விளையாடும் வீரர் ஒருவர் தற்போது இந்திய அணியில் இருக்கிறார் என்றும், அந்தப் பணியை அவர் சிறப்பாக இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் செய்து முடிப்பார் என்றும் இந்திய முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடரில் ஜொலிப்பார்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்கி அதற்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அவருக்கு அதற்கு அடுத்து அடுத்து சில காயம் காரணமாக விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக டி20 போட்டிகளில் அவர் மிக சிறப்பாக விளையாடியதை அனைவரும் மறந்துவிட முடியாது.

தற்போது அவர் காயத்திலிருந்து குணமாகி மீண்டும் பழையபடி மெதுவாக பந்து வீச துவங்கி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நிச்சயமாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் பேட்டிங் பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்வார் என்று சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Hardik pandya

மகேந்திர சிங் தோனியின் இடத்தை ஹர்திக் பாண்டியா நிரப்புவார்

மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு எப்படி இறுதி ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக விளையாட வரும் அதை நிச்சயமாக ஹர்திக் பாண்டியா இனி வரும் நாட்களில் இந்திய அணிக்கு செய்வார் என்றும் சிவராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 157.24 ஆகும். அதேபோல சர்வதேச டி20 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147.66 ஆகும்.

மிக சிறப்பாக பேட்டிங் பவுலிங் மற்றும் பில்டிங் என ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் வீரராக விளையாடி வரும் அவர் இந்திய அணிக்கு உலக கோப்பை டி20 தொடரில் பெரிய அளவில் உதவி புரிவார் என்று இறுதியாக கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.