இந்த ஒரு வீரர் போதும் யார் விக்கெட்டை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்! இந்திய பந்து வீச்சாளரை பாராட்டிய கபில் தேவ் !
இந்த வருட ஐபிஎல் தொடரில் மட்டும் 71 யார்க்கர் பந்துகளை வீசிய தமிழக வீரர் தங்கராசு நடராஜனை முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் வாய்நிறைய பாராட்டியிதிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களில் சேலத்தை சேர்ந்த தங்கராசு நடராஜனும் ஒருவர். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் ஐபிஎல் தொடரில் தேர்வானார்.
அந்த அணியில் மூன்று போட்டிகள் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்தார். அந்த அணியில் தான் இவருக்கு பெரும் வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் ஆடினார். ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை. தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டதால் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
29 வயதான இவர் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவர் வீழ்த்திய விக்கெட்டுகள் எல்லாம் பெரிய தலைகள் ஆகும் . விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்தார். அதுபோக கடைசி ஓவர்களில் யார்க்கர் பந்துகளை வீசி கிரிக்கெட் உலகை திணறடித்து விட்டார்.
கிரிக்கெட் உலகமே தற்போது இவரது பெயரை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் மட்டும் 71 யார்க்கர் பந்துகளை வீசி இருக்கிறார் நடராஜன். இந்நிலையில் நடராஜனின் பந்து வீச்சு குறித்து பேசியுள்ளார் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் கூறியதாவது…
இந்த வருட ஐபிஎல் தொடரில் என்னுடைய கதாநாயகன் நடராஜன்தான். இவருக்கு பயமே இல்லை. தொடர்ந்து யார்க்கர் வீசிக்கொண்டே இருக்கிறார்கள் தான் மிகச் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல 100 ஆண்டுகளாகவே இவர். வீசி இது போன்று யாரும் வீசி நான் பார்த்ததில்லை இவர் விராட் கோலி, தோனி, ஏபி டிவிலியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். சர்வதேச தரத்திலான வீரர்கள். இவர்கள் இவரை வைத்து யார் வேண்டுமானாலும் வீழ்த்தலாம் என்று தெரிவித்திருக்கிறார் என்று புகழ்ந்து பேசியிருக்கிறார் கபில் தேவ்.