டெஸ்டுன்னு வந்துட்டா நீ தான்யா கிங்.. 1 விக்கெட் எடுக்கவே கஷ்டமான பிட்ச்ல, 6 விக்கெட்ஸ்னா சும்மாவா! – அஸ்வின்-க்கு குவியும் வாழ்த்துக்கள்!

ஒரு விக்கெட் எடுப்பதற்கே கடினமாக இருக்கும் இந்த பிட்ச்சில் ஆறு விக்கெட்டுகளை எடுத்திருக்கும் அஸ்வின் கிங் தான் என்று இணையதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா அணி.

கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட்  இருவரும் துவக்க விரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. அந்த முக்கியமான கட்டத்தில் ஜோடியின் பார்ட்னர்ஷிப்பை உடைத்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தினார் அஸ்வின்.

அதன் பிறகு கவஜா மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால்களை கொடுத்தனர். இவர்களின் விக்கெட்டை உடைப்பதற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் திணறினர். கிட்டத்தட்ட 50 ஓவர்களாக இந்த பார்ட்னர்ஷிப் நீடித்து 5வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்திருந்தனர்.

அப்போது உள்ளே வந்த அஸ்வின், ட்ரிக்ஸ் செய்து கேமரூன் கிரீன் விக்கெட்டை தூக்கினார். அதே ஒருவரில் அலெக்ஸ் கேரி விக்கெட்டையும் எடுத்து அசத்தினார்.

பின்னர் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 70 ரன்கள் சேர்த்த டாட் மர்பி மற்றும் நேத்தன் லயன் இருவரின் விக்கெட்டையும் எடுத்து ஆஸ்திரேலியா அணி 480 ரன்களில் ஆல்அவுட் ஆவதற்கு முக்கிய பங்காற்றினார்.

பவுலிங்கிற்கு சுத்தமாக சாதகம் இல்லாத இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பல சாதனைகளையும் படைத்திருக்கிறார் அஸ்வின்.

குறிப்பிடத்தக்கவிதமாக, பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். இந்திய வீரர்கள் மத்தியில் அணில் கும்ப்ளே சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு வந்திருக்கிறார்.

மேலும் இந்திய மண்ணில் 5+ விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், 25 முறை 5+ விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே மற்றும் அஸ்வின் இருவரும் சமனில் இருந்தனர். முதல் இன்னிங்சில் 5+ விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மைதானம் பந்துவீச்சிற்கு எந்த வகையிலும் சாதகமாக இல்லாத சூழலிலும் இப்படி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ட்விட்டரில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் வெளியான வாழ்த்துக்களில் சில..

Mohamed:

This website uses cookies.