இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் சுப்மன் கில இந்திய அணியின் வருங்கால மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக வலம் வருவார் என்று தற்பொழுது கூறியிருக்கிறார். இங்கிலாந்து மைதானத்தில் தனது முதல் சர்வதேச போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் அவர் நிச்சயமாக வருங்காலத்தில் இந்திய அணிக்கு நிறைய சாதனைகள் புரிவார் என்றும் கூறியிருக்கிறார்.
மிக சிறப்பான துவக்கத்தை கொடுத்த சுப்மன் கில்
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த பொழுது அனைவரும் கடினமான மைதானம் என்பதாலும் நியூஸிலாந்து அணியில் தலைசிறந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களில் இருப்பதாலும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் இழந்து விடும் என்று நினைத்தார்கள்.
ஆனால் ரோகித் சர்மா உடன் இணைந்து கில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் 62 ரன்கள் சேர்த்தனர். சுப்மன் கில் 64 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் நேற்றைய சூழ்நிலையில் அவன் அடித்த ரன்கள் அனைத்து இந்திய ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது.
இந்தியாவின் வருங்கால சிறந்த பேட்ஸ்மேனாக சுப்மன் கில் ஜொலிப்பார்
வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கில் விளையாடி இருக்கிறார். 8 டெஸ்ட் போட்டிகளில் 406 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆவரேஜ் 33.83 மட்டும் ஸ்ட்ரைக் ரேட் 57.34 ஆகும். 8 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை அரைசதம் குவித்திருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் இன்னும் ஒரு சதம் குவிக்கவில்லை. எந்த ஒரு இளம் வீரர்களுக்கும் முதல் சதம் அடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. கில் தன்னுடைய சதம் அடிக்கும் தாகத்தை அதிகரித்துக் கொண்டு போகிறார். அவர் கூடிய விரைவில் ஒரு சதம் அடிக்க வேண்டும்.
ஒரு சதம் எடுத்து விட்டால் அவருக்கு மனதளவில் நிறைய நம்பிக்கை ஏற்படும் என்றும், இதைவிட இன்னும் சிறப்பாக அவரால் விளையாட முடியும் என்றும் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இறுதியில் சுனில் கவாஸ்கர் நிச்சயமாக சுப்மன் கில் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஒருவராக வலம் வருவார் என்றும், அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்றும் கில்லை பெருமை பாராட்டி உள்ளார்.