“அந்த பையன் டீமுக்கு வந்தபிறகு.. இந்திய அணி பயங்கரமா மாறிடுச்சு”; முன்னாள் இந்திய வீரருக்கு டிராவிட் புகழாரம்! அது தோனி இல்லை

இவர் வந்த பிறகுதான் இந்திய அணியின் தரம் சற்று உயர்ந்தது என ஓய்வு பெற்ற வீரரை குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இந்தியா மற்றும் சென்னை அணியில் தோனியுடன் தொடர்ந்து விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா இருவரும் ஒருசேர சர்வதேச போட்டிகளிலிருந்து தங்களது ஓய்வு முடிவு அறிவித்தனர்.

பிசிசிஐ அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் ரெய்னா ஓய்வு பெற்றதற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் ரெய்னா பற்றிய சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

டிராவிட் தெரிவித்ததாவது: “இந்திய அணியின் பீல்டிங் தரம் ரெய்னா வந்த பிறகு உயர்ந்திருக்கிறது. அண்டர் 19 அணியில் ரெய்னா ஆடியபோது நான் அவரை கவனித்திருக்கிறேன். மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் நிச்சயம் இந்திய அணியிலும் ஜொலிப்பார் என யூகித்தேன். அதற்கேற்றார்போல் கடந்த தலைமுறையில் இந்திய அணி பெற்ற பெரும்பாலான வெற்றிகளில் சுரேஷ்ரெய்னா முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

இந்திய அணியின் பீல்டிங்கை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றவர் ரெய்னா. இந்திய அணியில் இவர் கீழ் வரிசையில் பேட்டிங் இறக்கப்பட்டார். ஆனால் மேல் வரிசையில் இவர் ஆடியிருக்க வேண்டும். சென்னை அணிக்காக மேல் வரிசையில் ஆடி வரும் ரெய்னா தொடர்ந்து பல சீசனுக்காக அதிக ரன்களை குவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். உண்மையில் ஒரு பயங்கரமான கிரிக்கெட் வீரர்.” என பேசினார்.

பல்வேறு கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேசிய அகடமி உறுப்பினர்கள் பங்கேற்ற இணையவழி கருத்தரங்கத்தில் பேசிய ராகுல் டிராவிட், “பல இந்திய வீரர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். அவர்களுக்கு சரியான ஊக்கமளிக்க முன்னாள் வீரர்கள் பயிற்சியாளராக வருவதற்கு ஆர்வம் தெரிவிக்க வேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.

Prabhu Soundar:

This website uses cookies.