வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.
ஐந்து முறை உலக கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் 4-1 என டி20 தொடரில் தோல்வியை தழுவியது, குறிப்பாக வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் ஏற்பட்ட இந்த டி20 தொடருக்கான தோல்விக்கு முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் மிகமோசமான முறையில் பந்து வீசினார்.
பின் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பழிதீர்க்கும் வகையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.இதில் குறிப்பாக வேற லெவல் கம்பெக் கொடுத்த மிச்செல் ஸ்டார்க் அந்த தொடரில் 11 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். மேலும் அந்தத் தொடரின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,”மிச்செல் ஸ்டார்க் ஒயிட் பால் போட்டிகளில் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் ஆவார், மேலும் பந்தை மிக அற்புதமாக சுவிங் செய்வதில் வல்லவரான இவர் டெத் ஓவர்களில் மிக சிறந்த முறையில் பந்துவீச கூடியதில் உலகத்தரம் வாய்ந்தவர். இப்பேர்ப்பட்ட ஒரு மிகச்சிறந்த வீரர் ஆஸ்திரேலிய அணியில் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம், மேலும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஹஸல்வுட்டும் ஆஸ்திரேலிய அணியில் இருப்பது எங்களுக்கு மிகப்பெரும் பலம் என்று தெரிவித்தார். மேலும் துபாயில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக மிட்சல் ஸ்டார்க் மிகச் சிறந்த முறையில் விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வருகிற ஆகஸ்ட் மூன்றாம் தேதி பங்களாதேஷ் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஐந்து டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.