பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிறுவனர் நெஸ் வாடியா கேஎல் ராகுல் குறித்தும் பஞ்சாக்கினி குறித்தும் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்
2021 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரில் அனைவரும் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இருந்தபோதும் 2022 ஐபிஎல் தொடருக்கான பேச்சுகளும் அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது, குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்படுவதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் எந்த வீரரை புதிதாக தனது அணியில் இணைக்கலாம், எந்த வீரரை நீக்கலாம் என்ற திட்டங்களை தீட்டி வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் குறித்து அந்த அணியின் நிறுவனர் நெஸ் வாடியா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் முகமது ஷமி போன்ற வீரர்களைத் தவிர மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இந்நிலையில் தனது அணி குறித்து பேசிய நெஸ் வாடியா, கேஎல் ராகுல் தக்க வைக்கப் படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது,ஆனால் அவரை தவிர்த்து சில வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம், மேலும் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு தனி அந்தஸ்தை இருக்கிறது, ஒரு வீரரை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால் 11 வீரர்கள் நிச்சயம் தேவை, மேலும் நாங்கள் எந்த வீரரை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்து வருகிறோம்.ஐபிஎல் தொடரில் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் நெஸ் வாடியா தெரிவித்திருந்தார்.
2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மிக மோசமாக செயல்பட்டு விளையாட்டுக்கு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.