அந்த மனுஷன சைலன்ட்னு நெனைக்காதிங்க.. செம்ம வைலன்ட்; முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர்!

அந்த மனுஷன சைலன்ட்னு நெனைக்காதிங்க.. செம்ம வைலன்ட்; முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர்!

அவர் மிகவும் அமைதியானவர் தான், ஆட்டம் வேற மாதிரி இருக்கும் களத்தில் என முன்னாள் கேப்டனை புகழ்ந்துள்ளார் இந்திய வீரர் பிரக்யன் ஓஜா.

இந்திய அணியில் 2008ம் ஆண்டு பிரக்யான் ஓஜா அறிமுகமானார். அதன்பிறகு 2009ல் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக நீண்டகாலம் அவர் ஆடவில்லை என்றாலும், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே ஆகிய பல சிறந்த வீரர்களுடன் இணைந்து  ஆடியுள்ளார்.

ஓஜா இந்திய அணியில் தோனி தலைமையிலேயே ஆடியுள்ளார். அணியில் பல முன்னணி வீரர்களுடன் ஆடியிருந்தாலும், இவர்தான் சிறந்த வீரர் என்ற அளவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியில் இருக்கையில், தனது சூழல் பந்துவீச்சை வலுப்படுத்த அனில் கும்ப்ளே உதவியிருப்பதாக தெரிவித்த ஓஜா, அனில் கும்ப்ளேவை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் பேசிய ஓஜா, “மைதானத்தில் கும்ப்ளே மிகுந்த ஆக்ரோஷமாக இருப்பார். எதிரணி வீரர்களிடம் மட்டுமல்லாது சொந்த அணி வீரர்கள் மீதும் கோபப்படுவார். களத்தில் தான் அப்படி இருப்பாரே தவிர, களத்திற்கு வெளியே தனிப்பட்ட முறையில் ரொம்ப இனிமையானவர்.” என்று தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியும் இருக்கிறார். ஓய்வுக்கு பிறகு 2016-2017 காலக்கட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

India head coach Anil Kumble before the ICC Champions Trophy, semi-final match at Edgbaston, Birmingham. (Photo by Mike Egerton/PA Images via Getty Images)

ஓய்வுக்கு பிறகு, பிசிசிஐ உடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த செயல்பட்டு வருகிறார்.

ஓஜா இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். தோனியின் கேப்டன்சியில் மட்டுமே ஓஜா தனது கெரியரில் ஆடியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.