புஜராவின் ஆட்டம் ஹசிம் ஆம்லா போன்று இருக்கிறது; ஒப்பிட்டு பேசிய ஜாம்பவன்!!

புஜாரா விளையாடுவது ஹசிம் அம்லா போன்று இருக்கிறது என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா சென்று விளையாடி வரும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒருமுறைகூட வென்றதில்லை. ஆனால் முதல் முறையாக இந்த தொடரில் வெற்றியை பதிவு செய்தது. அதேபோல் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 1992ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி தோல்வியை சந்தித்தது இல்லை. அதனை மாற்றியமைத்து முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது. 

இந்திய அணிக்கு தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா, இரண்டாவது போட்டியின்போது , 2வது இன்னிங்சில் மிகச் சிறப்பாக விளையாடி குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்தார். இவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2021 ஆம் ஆண்டு விளையாடிய 26 இன்னிங்ஸ்களில் சராசரியாக 28.00 மட்டுமே கொண்டிருக்கிறார். 

இதனால் இவரை இந்திய அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கிவிட்டு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இரண்டாவது இன்னிங்சில் நன்றாக விளையாடியதால் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். இதற்கிடையில் புஜாரா விளையாடுவது தென்ஆப்பிரிக்கா வீரர் ஹஷிம் அம்லா போன்று இருக்கிறது என ஒப்பிடுகிறார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

“தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஹசிம் அம்லா விளையாடுவதைப் போன்றே சித்தேஸ்வர் புஜாரா ஆட்டம் இருக்கிறது. மிகவும் நிதானமாக, சூழலை தனது கட்டுக்குள் வைத்துக்கொண்டு பேட்டிங் செய்கிறார். அம்லா, பந்து எந்த பக்கம் திரும்புகிறது அதை எப்படி அடிக்கவேண்டும் என்று சரியாக கணித்து அதற்கு ஏற்றார்போல் விளையாடுவார். அதனை பவுண்டரிக்கு அடித்து விட்டாலும் எதுவும் நடக்காதது போல நிதானத்துடன் இருப்பார். புஜாரா விளையாடுவதைப் பார்க்கும் போது, அப்படியே அம்லாவின் ஆட்டத்தை பார்ப்பது போல இருக்கிறது.” என ஒப்பிட்டு பேசினார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் வருகிற பதினோராம் தேதி துவங்குகிறது.

 

Prabhu Soundar:

This website uses cookies.