விராட் கோலி கிடையாது… பந்துவீச்சில் எனது முன்னேற்றத்திற்கு இவர் தான் காரணம்; சாஹல் ஓபன் டாக் !!

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் சஹால் யூடியூப் சேனலில் ஆரம்பகால கட்டத்தில் தன்னுடைய பந்துவீச்சு உதவியாக இருந்த பயிற்சியாளர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சஹல், கடந்த 2014ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எடுக்கப்பட்டார். கடந்த சீசன் வரை அந்த அணிக்கு முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஆகவும் திகழ்ந்திருக்கிறார்.



பெங்களூரு அணியில் அபாரமாக செயல்பட்டதால் 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த அளவிற்கு தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்த இவரை பெங்களூரு அணி வரும் ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு முன்பாக தக்க வைக்கவல்லை. முன்னணி லெக் ஸ்பின்னராக இருக்கும் இவரை எடுப்பதற்கு பல அணிகள் போட்டி போடுகின்றன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்களை பேசி வரும் சுழற்பந்துவீச்சாளர் சஹால் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது பெங்களூர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு நான் பெங்களூர் அணியில் இணைந்த பொழுது பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நான் கிரிக்கெட்டில் முன்னேறுவதற்கு பல உதவிகளை செய்துள்ளார், டேனியல் வெட்டோரி ஒரு சிறந்த அறிவாளி அவர் என்னுடைய பந்துவீசும் ஸ்டைலை மாற்றவில்லை அதற்கு பதில் பந்து எப்படி செயல்படும் என்பது குறித்து கற்றுக் கொடுத்தார், ஒரு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி எந்த ஒரு நெருக்கடியையும் தரவில்லை அதற்கு மாறாக எனக்கு பயன்படும் விஷயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தார். எனக்கு 3-4 நிமிடங்கள் இருக்கும் வீடியோக்கள் அனுப்பி என்னுடைய பந்து வீச்சிற்கு உதவியாக இருந்தார், அதே போன்று பந்து வீசும் பொழுது கையை மாற்றி வீசாமல் அதற்கு பதில் மணிக்கட்டை மட்டும் சிறிய மாற்றங்கள் செய்து வீசினாள் பேட்ஸ்மேன்களுக்கு பந்தை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்ற வித்தையை எனக்கு கற்றுக் கொடுத்தார் என்று டேனியல் வெட்டோரி குறித்து சஹால் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.