ரோஹித் சர்மா கிடையாது, மும்பை இந்தியன்ஸ் அணியின் தோனி இந்த முன்னாள் மும்பை வீரர்தான் ; ஹர்பஜன் சிங் சொல்கிறார்..
மும்பை இந்தியன்ஸ் அணியின் தோனியாக பொல்லார்ட் திகழ்ந்தார் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
ரோஹித் சர்மாவிற்கு பிறகு மும்பை அணியில் முக்கிய பொறுப்பாற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்ட்., பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டில் மட்டுமில்லாமல் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் அணியை வழிநடத்துவதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உறுதுணையாக திகழ்ந்தார்.
இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 189 போட்டிகளில் பங்கேற்று 3412 ரன்கள் அடித்துள்ள மேலும் பந்துவீச்சில் 69 விக்கெட்களை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பல்வேறு விதத்திலும் மிகப்பெரும் உறுதுணையாக திகழ்ந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே தன்னுடைய கிரிக்கெட்டை அர்ப்பணித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பொல்லார்ட், 2022 ஐபிஎல் தொடரோடு தான் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வையை அறிவிப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தன்னுடைய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக நியமித்துள்ளது.
சென்னைக்கு தோனினா.. மும்பைக்கு பொல்லார்ட்…
என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளராக பொல்லார்ட் செயல்பட்டாலும், அவர் அணியில் இல்லாமல் போனது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது என்பது கூறினால் அது மிகையாகாது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து ஜாம்பவான் ஹர்பஜன்சிங்., மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்ட் இல்லாமல் போனது அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது என்று தெரிவித்ததோடு, மும்பை இந்தியன்ஸ் அணியின் தோனியாக பொல்லார்ட் வலம் வந்தார் என்றும் பொல்லார்ட்டை பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில்.,“பொல்லார்ட் மிக சிறந்த வீரராக திகழ்ந்தார் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதுகெலும்பாக செயல்பட்டார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது போட்டி கைநழுவி சென்றாலும் அவர் கிரீசில் இருக்கும் வரை போட்டியை வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்கும். அவர் அணியில் இருந்த போது முடியாத காரியத்தையும் முடித்து காட்டும் திறமை அவரிடம் இருந்தது. எப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் எப்படிப்பட்ட திறமையான பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் மிகவும் சிறப்பாக செயல்படும் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த தோனி” என்று பொல்லார்ட்டை ஹர்பஜன் சிங் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.