இங்கிலாந்து அணி நட்சத்திர பேட்ஸ்மேன் ஜானி பேஸ்டோ தரம் வாய்ந்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சமாளிப்பதற்கு சிரமப்படுகிறார் என்று கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி விடுபட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் முதலில் பந்துவீச்சை சேர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்துவிட்டு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து தன்னுடைய முதல் இன்னிசை விளையாடி இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது.
இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் ஜானி பெஸ்டோ (106) தவிர மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை, இதன் காரணமாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, 132 ரன்கள் முன்னிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாட துவங்கிய இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்துள்ளது, இதில் அதிகபட்சமாக புஜாரா 66 ரங்களும், ரிஷப் பண்ட் 57 ரங்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 377 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் போட்டியின் நிலை குறித்தும், போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் குறித்தும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில் தன்னுடைய கிரிக்கெட் வர்ணனையின் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான், ஜானி பேஸ்டோ தரம் வாய்ந்த இந்திய அணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு தடுமாறுகிறார் என்று வர்ணனையில் பேசி உள்ளார்.
இது குறித்து கிரீம் ஸ்வான் பேசும்போது,“ கடந்த வாரம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேஸ்டோ இந்திய அணிக்கு எதிரான இந்தா டெஸ்ட் போட்டியில், தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்தை எதிர்கொள்ள தடுமாறுகிறார், இதுபோன்ற உலக தரம் வாய்ந்த பந்துவீச்சை ஜானி பேஸ்டோ எதிர்பார்க்கவில்லை ” என்று அதில் பேசியிருந்தார்.