இந்திய அணியில் நுழைய தயாராகும் புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்! ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பெரும் நெருக்கடி!
மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றவுடன் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்பதற்கான தேடல் மிகத் தீவிரமாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக அந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தார். ஆனால், அவரிடம் எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டம் இல்லை. திறமையிருந்தாலும் சர்வதேச அளவில் அடித்தால் மட்டுமே அந்த இடத்தை தக்கவைக்க முடியும்.
இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் விக்கெட்கீப்பர்லகளாக மிகச் சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக மிகவும் நன்றாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் மூலம் இப்படிப்பட்ட வீரர்கள் நமக்கு கிடைத்துள்ளனர்
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷான் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு 13 போட்டிகளில் மட்டுமே விளையாடி 516 ரன்கள் குவித்தார். மேலும், இந்தத் தொடரில் மட்டும் 30 சிக்சர் அடித்து, அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற விருதை தட்டிச் சென்றார்
இந்நிலையில் இவரும் இந்திய அணிக்கான விக்கெட் கீப்பருக்கான போட்டிகயில் இணைந்து விட்டார் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பேசியிருக்கிறார். கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ரிசப் பன்ட் ஆகியோர் இருக்கையில் இந்த ரேஸில் இவரும் இணைந்து விட்டார் என்று தெரிகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில்…
இந்த வருட ஐபிஎல் தொடரில் இசான் கிஷன் ஆட்டத்தைப் பார்க்க மிகச் சிறப்பாக இருந்தது. நான்காவது இடத்திலும், துவக்க இடத்திலும் தன்னை அந்த இடத்திற்கு ஏற்றார் போல் மாற்றி கொண்டு நன்றாக ஆடினார்.
அவருடைய இந்த திறமை தான் இந்திய அணிக்காக ஆடும் திறமையாக பார்க்கப்படுகிறது. மிகச் சரியான நேரம் வரும்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் முக்கிய நபராக இருக்கப் போகிறார் இவர். அவரால் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் இதேபோல் இந்திய அணிக்காக பேட்டிங் செய்ய தயாராகி விட்டால் அவர்தான். அடுத்த விக்கெட் கீப்பர் என்று தெரிவித்திருக்கிறார் எம்எஸ்கே பிரசாத்