“இப்போ தெரியுதா!” நாங்க முதல்தர அணியா? இரண்டாம்தர அணியா? என்று – இளம் வீரர் காட்டமான பேட்டி!

“இப்போது புரிகிறதா! நாங்கள் இரண்டாம் தர அணியா? இல்லையா? என்று.” 2வது போட்டிக்கு பின் பேட்டியளித்துள்ளார் இஷான் கிஷன்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை முடித்துவிட்டு, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அப்போது இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

எளிதாக அடிக்கக்கூடிய ஸ்கோரை ஏன் இப்படி மந்தமாக விளையாடி தோல்வியை தழுவினார்கள்? மேலும் ஒரு அணியில் இத்தனை ஓபனிங் வீரர்கள் இருக்கிறார்கள். எதற்காக சரியான அணியை தேர்வு செய்யவில்லை? இது முற்றிலுமாக இரண்டாம் தர அணி! என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயித்த 278 ரன்களை துரத்தி 45.5 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. இளம் வீரர் இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் விலாசினார். ஷ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் விலாசினார். இந்திய அணி 7 கேடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை சமன் செய்தது.

போட்டி முடிந்த பிறகு, ‘இப்போது புரிகிறதா! இது முதல் தரமான அணியா? அல்லது இரண்டாம் தரமான அணியா? என்று’  என இஷான் கிஷன் பேசினார். மேலும் பேசிய அவர், “முதல் போட்டிக்கு பிறகு வந்த விமர்சனங்கள் அனைத்தும் நான் கவனித்தேன். சில நேரங்களில் பலமிக்க அணியும் தோல்வியை தழுவும். எதிரணி வீரர்கள் ஒட்டுமொத்த அணியாக நன்றாக செயல்பட்டு இருப்பார்கள். விமர்சனங்களை வரவேற்கிறோம். அதற்காக முறையற்ற விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களை இரண்டாம்தர அணியென விமர்சித்தார்கள். தற்போது புரிந்திருக்கும் நாங்கள் எப்படிப்பட்ட அணியென்று. முறையான விமர்சனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. எங்கள் வளர்ச்சிக்காக பேசுங்கள். குறைகூற வேண்டுமென்று பேசவேண்டாம்.” என முதிர்ச்சியாக பதில் அளித்தார்.

Mohamed:

This website uses cookies.