இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் 40 வயதான ஹெராத் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்ஆப்பிரிக்கா அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிந்து பின்னர் வரும் இங்கிலாந்து தொடருக்குப்பின் ரங்கனா ஹெராத் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.
காலே மைதானம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். மேலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இலங்கை ஆடுகளத்தை தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை டெஸ்ட் அணி: தினேஷ் சந்திமால் (இ) , நிரோஷன் திக்வெல்ல , கருணாரத்ன , குசல்; மெண்டிஸ் , குசல் பெரேரா , ரொஷான் சில்வா , ஏஞ்சலோ மேத்யூஸ் , தனுஷ்காகுணதிலக , தனஞ்சயன் டி சில்வா , ரங்கன ஹேரத் , சுரங்க லக்மால் , தில்ருவன் பெரேரா , அகில தனஞ்சய , லஹிரு குமார , லக்சன் சந்தகன் , கசுன் ரஜிதாவ்
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி: பாப் பிளிஸ்சிஸ் (இ) , ஹசிம் ஆம்லா , டெம்பா பவுமா , குவிண்டோன் டி காக் , தியுனிஸ் டி பிரய்ன் , டீன் எல்கர் , ஹென்ரிக் க்லாசன் , கேஷவ் மகாராஜ் , லுங்கி ங்கிடி , பிலாண்டர் , டேல் ஸ்டெய்ன் , ககிசோ ரபடா , டபரஸ் ஷாம்சி , ஷான் வோன் பெர்க் , ஐடன் மார்க்ரம்